உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோ கோ, கேரம்: சாதித்த பள்ளிகள் 

கோ கோ, கேரம்: சாதித்த பள்ளிகள் 

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய கோ கோ போட்டிகள் நடந்தன. இதில், 17 வயது பிரிவில், பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளி அணி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணியை வென்றது. 19 வயது மாணவர் பிரிவில், கே.எஸ்.சி., அரசுப்பள்ளி அணி, மணி பப்ளிக் பள்ளி அணியை வென்றது. கேரம் போட்டி:  மாணவியர் ஒற்றையர், 14 வயது பிரிவில், டி.என்.எஸ்.எஸ்., காந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணி, கருப்பகவுண்டம்பாளையம் மாணவியர் பள்ளி அணியை வென்றது. 17 மற்றும் 19 வயது பிரிவில், வீரபாண்டி மாணவியர் அரசுப்பள்ளி அணி, லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளி அணியை வென்றது.  மாணவியர் இரட்டையர், 14 வயது பிரிவில், அல்அமீன் உயர்நிலைப்பள்ளி அணி, வீரபாண்டி பெண்கள் அணியை வென்றது. 17 வயது பிரிவில், பிரன்ட்லைன் அகாடமி அணி, வீரபாண்டி அரசுப்பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி அணி, லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளி அணியை வென்றது.  மாணவர் ஒற்றையர், 14 வயது பிரிவில், பெருந்தொழுவு அரசுப்பள்ளி அணி, கே.எஸ்.சி., அரசுப்பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், பெருந்தொழுவு அரசுப்பள்ளி அணி, அல் அமீன் உயர்நிலைப்பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், அல் அமீன் பள்ளி அணி, கே.எஸ்.சி., பள்ளி அணியை வென்றது.  இரட்டையர், 14 வயது பிரிவில், கே.எஸ்.சி., பள்ளி அணி, பெருந்தொழுவு பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், பெருந்தொழுவு பள்ளி அணி, கே.எஸ்.சி., அரசுப்பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், கே.எஸ்.சி., பள்ளி அணி, பெருந்தொழுவு அரசுப்பள்ளி அணியை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !