உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலை, இலக்கிய போட்டிகளில் அரசு கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

கலை, இலக்கிய போட்டிகளில் அரசு கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

உடுமலை : திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை , கட்டுரை, பேச்சு போன்ற பல்வேறு கலை, இலக்கியப்போட்டிகள் நடந்தது.இப்போட்டியில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியின் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவன் மாரிமுத்து கவிதை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழும் பெற்றார்.கட்டுரைப்போட்டியில், பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி கவுதமி முதலிடம் பெற்றார். அவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.பேச்சுப்போட்டியில், பி.எஸ்சி., இயற்பியல் மூன்றாம் ஆண்டு மாணவர், கவ்ரீஸ் மூன்றாம் இடம் பிடித்து, 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழும் பெற்றார்.மாநில அளவில், சென்னை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தில் கவிதை, கட்டுரைப்போட்டிகளில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாரிமுத்து, கவுதமி பங்கேற்றனர்.மாணவன் மாரிமுத்து மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ் இணைப்பேராசிரியர் கலைச்செல்வன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவியர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ