உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருப்புக்கு தானிய ஈட்டுக்கடன் அரசு வழங்க எதிர்பார்ப்பு

இருப்புக்கு தானிய ஈட்டுக்கடன் அரசு வழங்க எதிர்பார்ப்பு

உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், சிறப்பு திட்டத்தின் கீழ், தானிய ஈட்டுக்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் பொருளீட்டு கடன் ஆகிய கடன்களை பெற்று வருகின்றனர்.அறுவடை காலங்களில், விளைபொருட்களுக்கு செயற்கையாக விலை வீழ்ச்சி ஏற்படுத்தப்படுவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.இதைத்தவிர்க்க, விவசாயிகள், ஊரக கிட்டங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட குடோன்களில் விளைபொருட்களை இருப்பு வைக்கின்றனர்.சாகுபடிக்காக, பல்வேறு கடன்களை பெறும், விவசாயிகள், உரிய விலை கிடைக்கும் வரை வருவாயின்றி பாதிப்பதை தடுக்க, அரசு, தானிய ஈட்டுக்கடன் வழங்குகிறது.இத்தகைய தானிய ஈட்டுக்கடனுக்கு, 13.50 ஆக, இருந்த வட்டி சதவீதம், சில ஆண்டுகளுக்கு, முன், 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது, உடுமலை சுற்றுப்பகுதியில், மானாவாரியாக பயிரிடப்பட்ட, மொச்சை, கொண்டைக்கடலை, கொத்தமல்லி ஆகிய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.உரிய விலை கிடைக்க, விவசாயிகள் விளைபொருளை இருப்பு வைத்து விற்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், இருப்பு வைத்தே நஷ்டத்தை சமாளித்து வருகிறோம். எனவே, இருப்பு வைப்பவர்களுக்கு தானிய ஈட்டுக்கடன் அதிகளவு வழங்க வேண்டும்.மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்பட்ட சிறுதானியங்களுக்கு விலை இல்லை.இத்தகைய விளைபொருட்கள் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு, அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும், குறைந்த சதவீத வட்டியில், தானிய ஈட்டுக்கடன் வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு, கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை