துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் நல்விருந்து வழங்கல்
அவிநாசி; புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நல்விருந்து திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நல்விருந்து திட்டத்தின் கீழ் மாதம் ஒருமுறை அவிநாசி ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி (சி.பி.எஸ்.இ.) பள்ளி நிர்வாகம் சார்பில் நல்விருந்து வழங்கப்படுகிறது. அவ்வகையில், நேற்று ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளி நிர்வாக இயக்குனர் அக் ஷயா கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு, தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் சார்பில், ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக் கப்பட்டது.