உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி

அரசு பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி

உடுமலை : பத்தம் வகுப்பு பொதுத்தேர்வில், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றதையொட்டி, ஆசிரியர்களுக்கு மேலாண்மைக்குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மடத்துக்குளம் வட்டாரம் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 62 மாணவர்கள் தேர்வு எழுதி, 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தைகொண்டாடும் வகையில், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், சிறப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்த ஆசிரியர்களுக்கு, பொன்னாடை வழங்கி மரியாதை செய்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவினர் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை