உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

உடுமலை: தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு, தேர்வான மாணவருக்கு காரத்தொழுவு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில், மாநில அளவிலான சீனியர் பிரிவு மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி சிவகங்கையில் நடந்தது.இப்போட்டியில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிகார்த்திக் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் வாயிலாக, மாணவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்.இரண்டாவது முறையாக தேசிய அளவிலான போட்டியில் இம்மாணவர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவருக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கும், தலைமையாசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி