உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை

கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகளில், வரும் 15ம் தேதி, காலை 11:00 மணிக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இதில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும். பொதுமக்கள் இக்கூட்டங்களில் பங்கேற்று, கருத்துக்களை தெரிவிக்கலாம், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை