உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம சபா கூட்டம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கிராம சபா கூட்டம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பூர்; வரும், 23ம் தேதி தள்ளி வைக்கப்பட்ட கிராம சபா கூட்டம், மீண்டும், வரும், 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.வரும், 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.இதில் நீர் நிலை பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது. கிராம சபா கூட்டத்தை, 23ம் தேதி ஒத்தி வைத்து, நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், மீண்டும் கிராம சபா நடத்தும் தேதி ஒத்திவைக்கப்பட்டு, வரும், 29ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'கனவு இல்ல பயனாளிகளை தேர்வு செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் போன்ற பணிகளை இறுதி செய்து, கிராம சபாவில் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கோரிக்கை அடிப்படையில், 29ம் தேதி கிராம சபா நடத்தப்படும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ