குறை தீர் கூட்டம் ஒத்திவைப்பு
உடுமலை, ;ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் சார்பில், மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இம்மாதத்துக்கான கூட்டம் இன்று 5ம் தேதி உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நிர்வாக காரணங்களுக்காக, விவசாயிகள் குறை தீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடைபெறாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கூட்டம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.