2 பேர் மீது குண்டாஸ்
திருப்பூர், ; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தாராபுரம் எரகாம்பட்டியில் வாகன தணிக்கையின்போது, மூட்டைகளுடன் வந்த சரக்கு லாரியை சோதனை செய்தனர். 18 டன் ரேஷன் அரிசியை தென்காசி, சங்கரன்கோவிலிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதுதொடர்பாக, திண்டுக்கல், வடமதுரையை சேர்ந்த ரமேஷ், 32, சந்திரன், 43 ஆகியோரை கைது செய்தனர்.கடத்தலில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில், இருவரும் இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.