மேலும் செய்திகள்
பங்குச்சந்தை முதலீடு ரூ.5 லட்சம் கைவரிசை
24-Apr-2025
திருப்பூர், : திருப்பூரில், பங்குசந்தை முதலீடுக்கு கூடுதல் லாபம் என கூறி, 19.53 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் கைவரிசை காட்டியது.திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர், 45 வயது மதிக்க நபர். இவருக்கு, பங்குச்சந்தையில் குறைந்த முதலீடுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என, சமூக வலைதளங்களில் விளம்பரத்தை பார்த்தார். இதை நம்பி, அந்த லிங்க்குக்குள் சென்றதும், மும்பையில் இருந்து, தீப்தி ராஜசேகர் என்பவர் பேசினார்.அவர் கூறியதை உண்மையென நம்பி, அவர் கூறிய லிங்க்குக்குள் சென்று டெலிகிராம் குழுவில் இணைந்தார். தொடர்ந்து, 12 தவணைகளாக, 19.53 லட்சம் ரூபாயை கட்டினார். இதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதலாக பணம் செலுத்த கூறினர். அதன்பின், ஏமாற்றப்பட்டதை அறிந்து, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். ரூ.23 லட்சம் மோசடி
திருப்பூர் அருகேயுள்ள வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர், 29 வயது வாலிபர். கடந்த சில நாட்கள் முன், பகுதி நேர வேலையில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பார்த்தார். அதனை நம்பி, 'வாட்ஸ் அப் லிங்க்கில்' சென்றார். அதில், காட்ட கூடிய பொருட்களுக்கு ரேட்டிங்குக்கு, ரிவ்யூ கொடுப்பது மூலமாக சம்பாதிக்கலாம் என்று இருந்தது. முதல் நாளில் குறிப்பிட்ட தொகை கிடைத்தது.தொடர்ந்து, அதிக லாபத்தை பெற, 23 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதற்கான லாபத்துடன் பணத்தை எடுக்க முடியவில்லை. புகாரின் பேரில், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Apr-2025