உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழுதுகள் அமைப்பு சார்பில், பொதுமக்கள் பங்கேற்ற கையெழுத்து இயக்கம் திருப்பூரில் நேற்று நடந்தது. மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்தில், விழுதுகள் அமைப்பு இயக்குனர் தங்கவேல் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சந்திரா வரவேற்றார். மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் துவக்கிவைத்து பேசினார். திட்ட மேலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விழுதுகள் கள ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சூர்யா, பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி