உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஹேவன் பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் வெற்றி

 ஹேவன் பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் வெற்றி

திருப்பூர்: திருப்பூர் ேஹவன் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சம்யுக்தா பாரதிய கேல் பவுண்டேசன் சார்பில், 5வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற திருப்பூர் ேஹவன் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தனர். கோகோ போட்டியில் மாணவர் அணி இரண்டாமிடம், யோகா போட்டியில் இப்பள்ளி அணி முதலிடம், சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று தேசியப் போட்டிக்கு தேர்வு பெற்றது இவ்வாறு மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து, தேசியப் போட்டிகளுக்கு தேர்ச்சியும் பெற்றுள்ள மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டுதெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை