உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மழைக்கு பின் காய்ச்சல் அதிகரிப்பு; சுகாதாரத்துறை மவுனம்

 மழைக்கு பின் காய்ச்சல் அதிகரிப்பு; சுகாதாரத்துறை மவுனம்

உடுமலை: கிராமங்களில் அதிகரித்துள்ள பல்வேறு வகையான காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பால், நுாற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கடந்த சில வாரங்களாக, பல வகையான காய்ச்சல் பரவலால், மக்கள் மிகுந்த பாதிக்கப்படைந்துள்ளனர். சீதோஷ்ண நிலை மாற்றம், பருவமழை, குடிநீரின் தரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், காய்ச்சல் மற்றும் சளி, இருமல் பிரச்னையால், கிராமந்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் பாதித்து சிரமப்பட்டு வருகின்றனர். பருவமழைக்கு பிறகு, நன்னீரில் உருவாகும் கொசுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது; ஆனால், கொசு ஒழிப்பு பணிகளை, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம்; மேலும், சளி மற்றும் வறட்டு இருமல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன், நீண்ட நாட்களுக்கு காய்ச்சல் இருப்பதால், மக்கள் எவ்வித காய்ச்சல் பரவுகிறது என தெரியாமல், அச்சத்தில் உள்ளனர். குழந்தைகளும் காய்ச்சலால் பாதிப்பது அதிகரித்துள்ளது. காய்ச்சல் வேகமாக பரவி, நுாற்றுக்கணக்கான மக்கள் பாதித்தும், சுகாதாரத்துறை தரப்பில், காய்ச்சல் பாதிப்பு குறித்தோ, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள், சிகிச்கைக்காக எங்கு செல்வது என தெரியாமல், திணறி வருகின்றனர். இந்த நிலை உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ளது. எரிசனம்பட்டி, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. கிராம மக்கள் கூறியதாவது: பருவமழை காலம் துவங்கியதும், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து விட்டது. அனைத்து வயதினரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வட்டார வாரியாக சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். கிராமங்களில், பரவும் காய்ச்சலை கண்டறியும் வகையில், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல் தடுப்பு மற்றும் இதர பரிந்துரைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ