உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான ரோட்டில் சுகாதார கேடு

பிரதான ரோட்டில் சுகாதார கேடு

உடுமலை; உடுமலை ஒன்றியம், பெரிய கோட்டை ஊராட்சி, கே.ஜி., நகர் குடியிருப்பு பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பிரதான ரோட்டை ஆக்கிரமித்து, 10க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டப்படுவதோடு, அதன் கழிவுகள் ரோட்டோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது சுகாதாரத்தை பராமரிக்கவும் பெரிய கோட்டை ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தமிழக முதல் வர், மாவட்ட நிர்வாகத் திற்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை