உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொழிலாளர்களுக்கான உதவி மையம் துவக்கம்

 தொழிலாளர்களுக்கான உதவி மையம் துவக்கம்

அவிநாசி: 'ரீடு' தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், அவிநாசி ஒன்றியம், பழங்கரையில் தொழிலாளர் உதவி மையம், உலக மனித உரிமை நாளில் துவக்கி வைக்கப்பட்டது. இதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கான இணைய வழி சேவைகளான பி.எப்., ஆதார் சேவை, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதற்கான சட்ட ரீதியான விழிப்புணர்வு பெறுவதற்கு வழிமுறைகள் செயலாக்கம் குறித்து விளக்கப்பட்டது. 'ரீடு' நிறுவன இயக்குனர் கருப்பசாமி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டம்மாள் வரவேற்றார். திட்ட மேலாளர் நிர்மலா நிகழ்ச்சி குறித்து விளக்கினார். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நைநான் நன்றி கூறினார். தேவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை