மேலும் செய்திகள்
பெண்களுக்கு மூலிகை கஞ்சி வழங்குகிறோம்!
11-Aug-2025
அனுப்பர்பாளையம்,; வள்ளலார் திருமடம் சார்பில், திருமுருகன்பூண்டி முதல் சேவூர் வரை ஏழு இடங்களில் தினசரி காலை மூலிகை கஞ்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, எட்டாவதாக, 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனை அருகில் பொது மக்களுக்கு மூலிகை கஞ்சி இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. மாநகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், வள்ளலார் திருமடம் சிதம்பரசாமி, விஜய், ராஜேந்திரன், குழந்தைவேல் பங்கேற்று பொதுமக்களுக்கு இலவசமாக மூலிகை கஞ்சி வழங்கினர். தினமும், காலை, 7:00 மணிக்கு மூலிகை கஞ்சி தொடர்ந்து வழங்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
11-Aug-2025