உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரலாற்று ஆய்வு நடுவம் ஐம்பெரும் விழா

வரலாற்று ஆய்வு நடுவம் ஐம்பெரும் விழா

உடுமலை; உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், ஐம்பெரும் விழா நடந்தது.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், பொங்கல், ஐவர்மலை நுால் வெளியீடு, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா, தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு என ஐம்பெரும் விழா, உடுமலை குட்டைத்திடலில் நடந்தது.எம்.எல்.ஏ., க்கள் ராதாகிருஷ்ணன், மகேந்திரன் துவக்கி வைத்தனர். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர் சண்முகவேல், நகராட்சி தலைவர் மத்தீன், ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், மேற்குத்தொடர்ச்சி மலையின் சாரல் சின்னங்கள் எனும் நுாலும், அயிரை மலை எனும் ஐவர் மலை எனும் நுாலும் வெளியிடப்பட்டது.முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், புலவர் செந்தலை கவுதமன், தொல்லியல் ஆய்வறிஞர் முருகன், நடிகர் ஜீவானந்தம் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டினார். எலையமுத்தூர், பெரியவாளவாடி, தளவாய்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு திருவள்ளுவர் திருவுருவச்சிலையும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாடாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாட்டுப்புற நையாண்டி மேளம், சலகெருது ஆட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை