உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீதியில் தேன்கூடு; பீதியில் குடியிருப்பு

வீதியில் தேன்கூடு; பீதியில் குடியிருப்பு

மின் கம்பம் அபாயம்பொங்கலுார், கண்டியன்கோவில், உப்பக்கரைப்பாளையத்தில் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.- கதிர், அலகுமலை.குப்பை தேக்கம்பல்லடம், அருள்புரம், செந்துார் காலனி, ஜெயந்தி ஸ்கூல் ரோட்டில் குப்பை அள்ள வேண்டும். தேங்கிய குப்பையால் ஈக்கள், கொசுக்கள் அதிகமாகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- உதயகுமார், அருள்புரம்.n திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, லட்சுமிடவர் ரோட்டில் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. குப்பை அள்ள வேண்டும்.- மனோகரன், அண்ணா காலனி.வீணாகும் தண்ணீர்குன்னத்துார் - கோபி ரோடு, செங்காளிபாளையத்தில் குட்டை நிறைந்து, அத்திக்கடவு தண்ணீர் சாலையில் வீணாகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.- விஜய்கவின், செங்காளிபாளையம்.சாலை சேதம்திருமுருகன்பூண்டி பெருமாள் கோவில் அருகே சாலை சேதமாகி, குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- விஜி, கூட்டுறவு நகர்.கழிவுநீர் தேக்கம்அவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சி, தாசம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கழிவுநீர் வீடுகள் முன் தேங்கி நிற்கிறது. புதிய கால்வாய் கட்ட வேண்டும்.- சாமிநாதன், செம்பியநல்லுார்.அருகில் ஆபத்துதிருப்பூர், ெஷரீப் காலனி, சொசைட்டி வளாக எதிர்ப்புற வீதியில் பெரிய தேன்கூடு உள்ளது. ஆபத்து காத்திருக்கிறது. தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தேவராஜன், ெஷரீப் காலனி.பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்புதிருப்பூர், 17வது வார்டு, எம்.எஸ்., நகர் பஸ் ஸ்டாப்பில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதுடன், தள்ளுவண்டிகளும் இடையூறாக நிறுத்தப்படுவதால், பயணிகள் நிற்க வழியில்லை.- ரஞ்சித், எம்.எஸ்., நகர்.எரியாத விளக்குதிருப்பூர், 32வது வார்டு, கோல்டன் நகர் மெயின் ரோடு, பெருமாள் நகர் முதல் வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- ராஜேந்திரன், பெருமாள் நகர்.உடைந்த கதவுசேவூர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாயில் கதவும் உடைந்துள்ளது. கண்காணிப்பில் கவனம் செலுத்த சீரமைக்க வேண்டும்.- பவித்ரன், சேவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை