மேலும் செய்திகள்
ஊத்துக்குளி அருகே மில்லில் பயங்கர தீ
17-Apr-2025
அவிநாசி; அவிநாசி தாலுகா, நம்பி யாம்பாளையம் பழைய ஏ.டி., காலனியில் வசிப்பவர் ராமன் 70; அவரது மனைவி பழனாள், 60.இவர்களுக்கு நாகராஜ், 40, மணிகண்டன், 38 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலைக்கு கிளம்பும் முன், வீட்டில் சாமி கும்பிடுவதற்காக ஊதுபத்தி பற்ற வைத்து கும்பிட்டு சென்றுள்ளனர். ஊதுபத்தி கீழே விழுந்து, அருகில் இருந்த துணியில் தீப்பற்றியது.இதில் மளமளவென பற்றிய தீயால் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீடும் முற்றிலும் எரிந்து சேதமானது.அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அவிநாசி தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
17-Apr-2025