உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில் எந்த வயதில் எத்தனை பேர்! 40 முதல் 60 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் அதிகம்
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 40 முதல் 60 வயதிக்குட்பட்டோர் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 29ல் வெளியிடப்பட்டது.இதில், உடுமலை தொகுதியில், ஆண்கள் ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 954 பேரும், பெண்கள், ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 727 பேர், மூன்றாம் பாலினத்தவர், 31 பேர் என மொத்தம், 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 712 பேர் இடம் பெற்றுள்ளனர்.இப்பட்டியலில், வயது வாரியான வாக்காளர் எண்ணிக்கையில், 18 முதல் 19 வயதுடைய, முதல் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள், 1,918 பேர் இடம் பெற்றுள்ளனர்.20 முதல், 29 வயதுடையவர்கள், 38,564 பேரும்; 30 முதல், 39 வயதுடைய வாக்காளர்கள், 46,803 பேரும்; 40 முதல், 49 வயதில், 56,876 பேரும்; 50 முதல், 59 வயதில், 54,416 பேரும் உள்ளனர்.60 முதல், 69 வயதுடைய வாக்காளர்கள், 36,678 பேரும், 70 முதல்,79 வயதில், 21,046 பேரும், 80 வயதிற்கு மேல், 8,411 பேரும் இடம் பெற்றுள்ளனர். மடத்துக்குளம்
மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 109 ஆண்கள், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 333 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என, 2 லட்சத்து, 36 ஆயிரத்து, 461 பேர் இடம் பெற்றுள்ளனர்.இத்தொகுதியில், 18, 19 வயதில், முதல் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள், 1,742 பேர் இடம் பெற்றுள்ளனர்.20 முதல், 29 வயதில், 35,227 பேர்; 30 முதல், 39 வயது வரை, 42,188 பேர்; 40 முதல், 49 வயது வரை, 48,736 பேர்; 50 முதல், 59 வரை, 48,978 பேர் இடம் பெற்றுள்ளனர்.அதேபோல், 60 முதல், 69 வயது வரை, 32,381 பேர்; 70 முதல், 79 வரை, 18,811 பேர்; 80 வயதிற்கு மேற்பட்டோர், 8,398 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள, வரும், 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், வரும், 16, 17 மற்றும் 23, 24ம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம்கள் நடக்கிறது.மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவும், Voters Help Line App என்ற மொபைல்போன் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.