உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விலகினேன்; நீக்கப்படவில்லை: திருப்பூர் துரைசாமி விளக்கம்

விலகினேன்; நீக்கப்படவில்லை: திருப்பூர் துரைசாமி விளக்கம்

திருப்பூர்: 'ம.தி.மு.க.,வில் இருந்து நானேதான் விலகினேன்; நீக்கப்பட்டதாக வெளியான தகவல் சரியல்ல,'' என்று, ம.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:ஜூலை 1ல், திருப்பூரில் நடந்த ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியில், 'ம.தி.மு.க., அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, துரை வைகோ கட்சிக்குள் வந்த பின், கட்சியின் போக்கு சரியில்லை எனக்கூறி வைகோவுக்கு கடிதம் எழுதினார்.கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாக கூறி, அவைத்தலைவர் பதவியில் இருந்து, 2023ல் துரைசாமி நீக்கப்பட்டார்,' என குறிப்பிடப்பட்டிருந்தது; அது, உண்மை அல்ல.வைகோவின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த காரணத்தால், கட்சியில் இருந்து விலகுவதாக நான் தான் முடிவெடுத்து, 'ம.தி.மு.க.,வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் எனக் குறிப்பிட்டு, என் விலகல் கடிதத்தை, 2023, மே 29ல் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி ஆகியோருக்கு அனுப்பினேன். மாறாக, கட்சி என்னை நீக்கவில்லை' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 10, 2025 19:40

இவர் அந்தக்கால MLA வசதி படைத்த பனியன் கம்பெனி நடத்துபவர் விதி வைகோ பின் போய் அனைத்து மதிப்பும் போச்சு.


கண்ணன்
ஜூலை 09, 2025 11:36

அப்படி ஒரு கட்சி, அதில் ஒரு உறுப்புனர், அதில் ஒரு விலகல்… நல்ல காமெடி ஐயா!


முக்கிய வீடியோ