உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு இப்படி என்றால்... பயணம் எப்படி இருக்கும்?

ரோடு இப்படி என்றால்... பயணம் எப்படி இருக்கும்?

திருப்பூர்,; திருப்பூர் --- ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில் இருந்து கோல்டன்நகர், சஞ்சய்நகர், கருணாகரபுரி, கணேசபுரம், எம்.ஜி.ஆர்., நகர், கே.எஸ்., தியேட்டர் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மினிபஸ், டூவீலர், கார்கள் செல்லும் வழித்தடமாக மாரியம்மன் கோவில் வீதி உள்ளது.இந்த வீதியில் ரயில்வே பாலத்துக்கு அருகில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து ஓடி, சாலை சேதமாகியுள்ளது. பஸ்கள் அவ்வழியாக வந்தாலே, ஆட்டம் காண்கிறது. ஒரு மாதத்துக்கு மேலாக சாலையில் பெரிய குழி உள்ளது.கான்கிரீட் ரோட்டில் கலவை பெயர்ந்து கம்பி தெரியும் நிலை ஏற்பட்டும் சாலையை மாநகராட்சி சீரமைக்கவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் இவ்விடத்தை கடந்து செல்ல முடியாமல், ஒருபுறம் முன்னேறி செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ரிங்ரோட்டில் இப்படி

முருகம்பாளையத்தில் இருந்து மங்கலம் ரோடு பாரப்பாளையம் வரை ரிங்ரோடு உள்ளது. பாதாள சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் இச்சாலையில் சரிவர மூடவில்லை. வாகனங்கள் தொடர்ந்து பயணித்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குழியாகியுள்ளது. வேகத்தடை உள்ள இடத்தில் சாலை குழியாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி