உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறையருள் சேர்ந்தால் பிறவா நிலை எட்டலாம்

இறையருள் சேர்ந்தால் பிறவா நிலை எட்டலாம்

திருப்பூர்; ''மனிதப்பிறவியில், இறையருளை சேர்த்து வைத்தால், பிறவா நிலை அடைந்து மோட்சம் செல்லலாம்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் பிரியங்கா பேசினார். மஹாரண்யம் முரளீதர சுவாமியின் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி, திருப்பூர் காலேஜ் ரோடு, காவேரி வீதி, ஸ்ரீராமகிருஷ்ணமடத்தில் மஹாமந்திர அகண்ட நாமம் மற்றும் ஸத்ஸங்கம் நேற்று நடந்தது. காலை, 11:30 மணிக்கு, அகண்ட மஹாமந்திர கீர்த்தனம் துவங்கியது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில், பக்தர்களின் ஸத்ஸங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலை 6:30 மணிக்கு, முரளீதர சுவாமியின் சீடர் பிரியங்காவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அவர் பேசியதாவது: ஏழேழு ஜென்மம் எடுப்பதாக நாம் பேச்சுவழக்கில் கூறுகிறோம். ஒரு ஜென்மா, பூமியில், ஏழு வகை ஜென்மம் எடுக்கிறது. தாவரம் - மரம், நீர்வாழ் உயிரினங்கள், ஊர்வன, பறப்பன, நான்கு கால் விலங்குகள், மனிதர்கள் என, ஆறு ஜென்மம் எடுக்கிறோம். மனிதப்பிறவியில் மட்டுமே, மோட்சம் செல்ல வாய்ப்பு தேட முடியும். தேவராக பிறந்து சொர்க்கத்தில் இருந்தாலும், நேரடியாக மோட்சம் செல்ல முடியாது. மீண்டும் பூமிக்கு வந்து, பாவம் செய்யாமல், புண்ணிய கணக்கு இருந்தால் மட்டுமே, மோட்சம் அடைய முடியும். மனிதப்பிறவில், இறையருளை சேர்த்து வைத்தால், பிறவா நிலை அடைந்து மோட்சம் செல்லலாம். இவ்வாறு, அவர் பேசினார். மகாதீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ