மேலும் செய்திகள்
கடலுார் அருகே படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
16-Dec-2024
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில், பிரகல்யா விஷன் சார்பில், திருப்பூர், காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் கடல் கன்னி கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடைபெற்றுவருகிறது. தினமும் மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. பொருட்காட்சி அரங்கினுள் நுழைந்ததும், ஈபிள்டவர், புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட தத்ரூபமான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து குகை மீன்கள் கண்காட்சி அரங்குக்குள் செல்ல வேண்டும்.குகைக்குள் கண் கவரும் வண்ண மீன் தொட்டிகள் உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட தொட்டிகளில் விதவிதமான வண்ண மீன்கள் நீந்துகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் கடல் நீர் நிரப்பப்பட்டு வித்தியாசமான மீன்கள், 80க்கும் மேற்பட்டதை கண்டு ரசிக்கலாம். இதைக் கடந்து சென்றால் கடல் கன்னிகளின் சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. கடல் கன்னிகள் உள்ள தொட்டிகளுக்கு முன் நின்று, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழலாம். சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் சுனாமி, கொலம்பஸ் விளையாட்டுகள்; ஜெயன்ட் வீல் ராட்டினம், ரோலர் கோஸ்டர், பிரேக் டான்ஸ், வாட்டர் போட், பலுான் ரைட், 3டி பேய் வீடு போன்ற விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாப்கார்ன், ஸ்வீட் கான், ஐஸ்கிரீம், டெல்லி அப்பளம் என பல வகை உணவு வகைகளும் உண்டு. வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள் விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட கடைகளும் இடம்பெற்றுள்ளன. ---3 படங்கள்கடன் கன்னிகள்... குகை மீன்கள்... ராட்டினங்கள்திருப்பபூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் கடன் கன்னி கண்காட்சி நடைபெற்று வருகிறது.பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தம் குகையில் மீன் காட்சி.
திருப்பூர் மக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் கடல் கன்னி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இதுபோன்ற பிரம்மாண்டமான கடல் கண்காட்சி முதல் முறையாக நடைபெறுகிறது. வெளிநாடுகளில் இருப்பதை போன்றே லட்கக்கணக்கான மீன்களை கொண்ட சுரங்கங்கள், கடல் கன்னிகள் உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். 2025 ஜன., 19ம் தேதி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது.- கனகராஜ், உரிமையாளர், பிரகல்யா விஷன்.