| ADDED : நவ 26, 2025 05:48 AM
திருப்பூர்; போலி ஆவணம் வாயிலாக, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்ப்பட்ட அப்பீல் மனுவை திருப்பூர் கூடுதல் மாவட்ட கோர்ட் தள்ளுபடி செய்தது. திருப்பூரை் சேர்ந்தவர் சக்திவேல். ேஷர் மார்க்கெட் வர்த்தகர். அவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஜீவா, 46 என்பவர் சக்திவேல் பெயரில் போலியான சில ஆவணங்களை தயார்படுத்தி, கோவையில் உள்ள தனியார் வங்கியில் வங்கி கணக்கு துவங்கினார். கடபந்த, 2016ல், சக்திவேலின் ேஷர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஒரு நிறுவனத்தின் 3 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்து, வங்கி கணக்கில் அதற்கான தொகையை பெற்று, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து சக்திவேலின் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜே.எம்.எண்: 1 கோர்ட்டில், ஜீவாவுக்கு, 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்தார். இம்மனு நீதிபதி பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, ஜே.எம். கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.