உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துங்க! மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துங்க! மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உடுமலை; உடுமலையிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தி, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டியில், ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றிய கமிட்டி சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராதா, சித்ரா, உடுமலை ஒன்றிய செயலாளர் கல்பனா உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில், ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தை திறக்கவும், செல்லப்பம்பாளையம், எரிசனம்பட்டி, வாளவாடி, அமராவதி உட்பட ஆரம்பசுகாதார நிலையங்களை மேம்படுத்தி போதுமான, டாக்டர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர் நியமிக்க வேண்டும். ஜல்லிபட்டி ஊராட்சியில், சாலை, சாக்கடை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலிலிருந்து நீக்கவேண்டும். அதிகாலை முதல் சட்டவிரோத சாராய விற்பனை நடப்பதை தடுக்கவும், கஞ்சா, போதை பொருள் புழக்கத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத கனிமவளக் கடத்தல் மற்றும் குளம், குட்டைகளிலிருந்து அனுமதியின்றி மண் திருடுவதை தடுக்க வேண்டும். இவையுள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கனகராஜ், விவசாயிகள் சங்கதலைவர் ராஜகோபால், ஜல்லிபட்டி கிளைச்செயலாளர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ