உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் வலம்; குரங்கார் சேட்டை

பல்லடத்தில் வலம்; குரங்கார் சேட்டை

பல்லடம் : பல்லடம் நகரில், இரண்டு குரங்குகள் முகாமிட்டுள்ளன. கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் உலா வரும் குரங்குகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்களை ருசி பார்க்கின்றன. விரட்டி விட நினைக்கும் வியாபாரிகளை, குரங்குகள் ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்கின்றன. பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்கள் அவற்றை விரட்டி கடிக்க முயல்கின்றன. தெரு நாய்களால் குரங்குகளுக்கும், குரங்குகளால் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. குரங்குகளை வனத்துறையினர் பிடித்துச் செல்ல வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை