செயல்படாத சேவை மையம்
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 11வது வார்டு கவுன்சிலர் (இ.கம்யூ.) செல்வராஜ், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிய மனு: திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல அலுவலகத்தில், தமிழக அரசின் சேவை மையம் செயல்பட்டு வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் பயனடைந்து வந்தனர். தற்போது கடந்த ஒரு மாத காலமாக சேவை மையம் செயல்படாமல் உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் அரசின் சேவை மையம் செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. போக்குவரத்து வசதி இல்லாத சிறு பூலுவபட்டி பகுதியில் உள்ள வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு மக்கள் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. அனுப்பர்பாளையம் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.