உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ பணியாளர் விடுதி திறப்பு விழா

மருத்துவ பணியாளர் விடுதி திறப்பு விழா

திருப்பூர், : பூமலுார், பள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வள்ளலார் கல்வி அறக்கட்டளை சார்பில், மருத்துவ பணியாளர் தங்கும் விடுதி மற்றும் அரசு மருத்துவமனை நால்ரோடு அருகே, வள்ளலார் உணவகம் அமைக்கப்பட்டது; அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.இது குறித்து, அறக்கட்டளை நிர்வாக அறங் காவலர் ராமச்சந்திரன் கூறியதாவது: கல்விப்பணியில் இருந்து விடுவித்துக்கொண்டு, பள்ளிபாளையத்தில் இயங்கி வந்த அறக்கட்டளை, ஜீவகாருண்ய பணியை செய்து வருகிறது. பத்ரகாளியம்மன் கோவில் எதிரே, பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.சாமளாபுரம் பேரூராட்சி, அய்யம்பாளையத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம், சாமளாபுரத்தில் நிழற்குடை, அக்ரஹாரப்புத்துார் அரசு பள்ளிக்கு சிறிய கலையரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ