மேலும் செய்திகள்
ரூ.2.49 கோடியில் 48 பணிகளுக்கு டெண்டர்
11-May-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி பொது நிதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டப்படவுள்ளது. இப்பணிக்கு, 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியது.இதில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை முதல் செட்டிபாளையம் சந்திப்பு வரை வடிகால் அமைக்கப்படவுள்ளது. அதேபோல், 3வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் வடக்கு பகுதி யில், சிமென்ட் தளம் அமைக்கப்படவுள்ளது. இப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தனர். மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர்கள், தனலட்சுமி, லோகநாயகி உட்பட பலர் பங்கேற்றனர். பூண்டி நகராட்சி
திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2.78 கோடி ரூபாய் மதிப்பில் மண் ரோடுகள் தார் ரோடாக மாற்றும் திட்டம் துவங்கியது. அதேபோல் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், பழுதான சிமென்ட் ரோடு மற்றும் தார் ரோடுகள் சீரமைப்பு செய்யப்படவுள்ளது.சிறப்பு நிதி, 55 லட்சம் ரூபாய் மதிப்பில் மண் ரோடுகள் கான்கிரீட் ரோடுகளாக மாற்றப்படவுள்ளது. துாய்மை பாரதம் திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டப்படுகிறது.இப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் குமார், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
11-May-2025