உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அன்புச்சோலை மையம் துவக்கி வைப்பு

அன்புச்சோலை மையம் துவக்கி வைப்பு

பொங்கலுார்: தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பொங்கலுாரில் உள்ள அன்புச் சோலை மையத்தை நேற்று துவக்கி வைத்தார். பொங்கலுாரில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, துாத்துக்குடி, வேலுார், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய பத்து மாவட் டங்களில் தலா, 6.47 லட்சம் மதிப்பீட்டில், 25 அன்புச் சோலை மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. முழு பராமரிப்பு, உடல் பரிசோதனை, யோகா, உடற்பயிற்சி, நுாலகம் ஆகியவை அன்புச் சோலை மையங்களில் உள்ளன. கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி, கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை