மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
15-Jul-2025
அவிநாசி, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் - விஜயலட்சுமி தம்பதி, மகள் அகிலாண்டேஸ்வரி. தமிழ் வழியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் கோவை மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தார். அவிநாசி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தார் அறக்கட்டளை சார்பில் மாணவியை பாராட்டி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செந்தில், செயலாளர் லோகேஷ், பொருளாளர் ஜெயராம், கவுரவ ஆலோசகர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
15-Jul-2025