உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வருவாய் வழி திறனறித்தேர்வு; மாணவர்களுக்கு பாராட்டு

வருவாய் வழி திறனறித்தேர்வு; மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை, ; தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்குவதற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான இத்தேர்வு பிப்., 22ம்தேதி நடந்தது. உடுமலை சுற்றுப்பகுதியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சி வகுப்பில், 14 அரசு பள்ளிகளைச்சேர்ந்த, 80 மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த எட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கிழுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீதாரணி திருப்பூர் மாவட்ட அளவில் இரண்டாமிடம், இதே பள்ளியைச் சேர்ந்த சாருஹாசினி, சபரீஸ்வரன் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் சர்வஜித் மாவட்ட அளவில் மூன்றாமிடம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரிஷி, டல்சர், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுதீர், கீர்த்தி உள்ளிட்ட 8 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ