மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
திருப்பூர் : கோவை கல்லுாரியில் பயிலும் திருப்பூரை சேர்ந்த ஒரு மாணவர், மூன்று மாணவர்களின் 'பிராங்க்' மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார்.திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் உமாசங்கர் கூறியதாவது:'பிராங்க்' செய்பவர்களுக்கு அது மகிழ்ச்சியை தரலாம். அதை அனுபவிப் பவர்களுக்கு கஷ்டமான விஷயம் தான். சமூக வலைதளத்தில் தங்களுக்கு 'லைக்' கிடைக்க வேண்டும், வலைதள கணக்கில் 'இமேஜ்' உயர வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். எல்லாமே தீமையாக தான் முடிகிறது. ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை கேலி, கிண்டல் செய்வது, அதன் பின் அவர்களிடம் மன்னிப்பு கேட்பது, அதை அவர்களுக்கே தெரியாமல், வீடியோவாக பதிவு செய்வது மனதளவில் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். சமூக வலைதளங்கள் வந்த பின் தான் இவையெல்லாம் முளைத்துள்ளன.ஒருவர் பைக்கில் சாகசம் செய்கிறார்; மாடியில் இருந்து குதிக்கிறார்; அவருக்கு இவ்வளவு 'பின்தொடர்பவர்கள்' இருக்கிறார்கள் என்றால், நாமும் இதனை செய்தால், நம்மை பின் தொடர்வார்கள் என நினைக்கும் முட்டாள்தனமாக செயல்கள் இவை. பிராங்க் தீமை தரக்கூடியது. சமூக ஒழுக்கத்துக்கு எதிரானது. போலீசார் கண்டறிந்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.
10-Dec-2024