உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்திய - -ஜப்பான் நாடுகளின் ஜவுளி வர்த்தக பிரதிநிதிகள் சந்திப்பு

இந்திய - -ஜப்பான் நாடுகளின் ஜவுளி வர்த்தக பிரதிநிதிகள் சந்திப்பு

பல்லடம்; ஜப்பானில் நடந்த ஜவுளி வர்த்தக பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றது நம்பிக்கையை அளிப்பதாக, விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.ஜப்பான், டோக்கியோ நகரில், இந்தியா - ஜப்பான் ஜவுளி வர்த்தக பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில்,நம் நாட்டு ஜவுளித்துறையினர் பங்கேற்றனர். பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.சக்திவேல் கூறியதாவது:இந்திய - ஜப்பானிய வர்த்தக பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்றது மிகவும் நம்பிக்கைக் கூறியதாக அமைந்தது.பல முன்னணி ஜப்பானிய ஜவுளி நிறுவனங்களின் தீவிர பங்கேற்புடன், இருதரப்பு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் வாய்ப்புகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டன.இந்தியா உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இக்கூட்டம் சாதகமாக அமைந்துள்ளது. சில ஜப்பானிய நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தின. இதன் வாயிலாக இந்திய - -ஜப்பானிய நல்லுறவு மேம்படுவதுடன், இரு நாடுகளிடையே ஜவுளி வர்த்தக ரீதியாகவும் வலுப்பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை