உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயுத பூஜை குப்பைகள் அகற்றுவதில் முனைப்பு

ஆயுத பூஜை குப்பைகள் அகற்றுவதில் முனைப்பு

திருப்பூர்; ஆயுத பூஜை, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் திருப்பூரில் சேகரமாகும் அதிகளவிலான குப்பைகளை அகற்றுவதற்குள், மாநகராட்சி அதிகாரிகள் திக்குமுக்காடி வருகின்றனர். ஆயுத பூஜையையொட்டி குவியும் குப்பைகளை அகற்றுவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இன்று இரவு முதல் (2ம் தேதி) அகற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக கூடுதலாக குப்பை எடுக்கும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டதற்கு, ''பண்டிகை கால குப்பையை அகற்ற இன்று இரவு களப்பணியில் ஈடுபட உள்ளோம். மறுநாள் காலைக்குள் முழுவதுமாக அகற்ற திட்டமிட்டு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளோம். 3 ஆயிரம் டன் குப்பைகள் சேகரமாகலாம் கூடுதலாக, 40 வாகனங் கள் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், எங்களுக்கு இது ஒரு படிப்பினையாக உள்ளது. வீட்டில் சேகரமாகும் பெட், அட்டை உள்ளிட்ட குப்பைகளை குவித்து வைக்காமல், பொதுமக்கள் மற்ற நேரங்களில் கொடுத்தால், அதை சிமென்ட் பேக்டரிக்கு அனுப்பலாம். அதை மக்கள் செய்யாமல், ஒட்டுமொத்தமாகவெளியேற்றி விடுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை