மேலும் செய்திகள்
'சர்வர்' வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்
13-May-2025
திருப்பூர் : கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கும் அதே நேரம், கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடையை கணக்கிட்டு டெலிவரி செய்ய வேண்டும், என, ரேஷன் கடை ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் எடை மெஷின், புளுடூத் வாயிலாக, பாயின்ட் ஆப் சேல் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், கார்டுதாரர்களுக்கு எந்த குறைபாடும் இன்றி பொருட்கள் வழங்கவும், பொருள் விற்பனை மற்றும் இருப்பு விவரங்களை 'ஆன்லைனில்' சரி பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரேஷன் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக எங்கள் சங்கம் வாயிலாக வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.வினியோகம் செய்யும் பொருட்களுக்கு எடை கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது வரவேற்க கூடியதாக உள்ளது. அதேநேரம், கடைகளுக்கு வரும் பொருட்களின் எடையையும் உறுதிப்படுத்தி, சரி பார்த்து, இருப்பு கணக்கில் சேர்க்க வேண்டும். கிடங்கிலிருந்து கொண்டு வரும் மூட்டைகளில் எடை குறைவாகவே பெரும்பாலும் வருகிறது. ஆனால், மூட்டை எண்ணிக்கையில் தான் பொருள் எடை கணக்கிட்டு இருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறது.அரிசி உள்ளிட்ட பொருட்கள் மூட்டை அடிப்படையில், 50 கிலோ என இருப்பில் சேர்க்கின்றனர். ஆனால், பல கிலோ எடை குறைவாகவே அனுப்புகின்றனர். இதனால், கடை ஊழியர்கள் வீண் பழிக்கும், நடவடிக்கைக்கும் ஆளாகும் நிலை உள்ளது. எடை குறைவாக வரும் பொருட்களுக்கு கடை ஊழியர்கள் தான் பொறுப்பேற்கும் அவலம் நீடிக்கிறது. எனவே, சரியான எடையில் பொருட்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
13-May-2025