உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் பாதியை காணோம் சீரமைக்க வலியுறுத்தல்

ரோட்டில் பாதியை காணோம் சீரமைக்க வலியுறுத்தல்

உடுமலை : ஒட்டுக்குளம் நீர் வரத்து கால்வாய் கரையிலுள்ள ரோடு, அரிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.உடுமலை அருகே ஒட்டுக்குளத்துக்கு, ஏழு குள பாசன திட்ட குளங்களில் இருந்து நீர் வரத்து உள்ளது. இந்த நீர் வரத்து கால்வாய், போடிபட்டி உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ளது. இந்த ரோட்டை பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.நீர் வரத்து கால்வாய் நீண்ட காலமாக துார்வாரப்படாமல், பல இடங்களில் புதர் மண்டி, காணாமல் போகும் நிலையில் உள்ளது. கடந்த மழைக்காலத்தில், கால்வாயில் தண்ணீர் சீராக செல்லாமல், ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், ரோட்டோரத்தில் அரிப்பு ஏற்பட்டு, சில பகுதியில், ரோடே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதி ரோட்டில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் தத்தளிக்கின்றனர்.இப்பிரச்னை தொடர்கதையாவதை தடுக்க, பொதுப்பணித்துறையினர் நீர் வரத்து கால்வாயை துார்வார வேண்டும்; ஒன்றிய நிர்வாகம் வாயிலாக சேதமடைந்த ரோட்டை புதுப்பிக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி