மேலும் செய்திகள்
தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
02-Feb-2025
திருப்பூர்; பொதுமக்கள் புகார் அளித்ததால், கார்த்திக் நகர் சாய ஆலையில் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், மாநகராட்சி 33வது வார்டு, கார்த்திக் நகரில், சாய ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த ஆலையிலிருந்து கரித்துகள்கள் வெளியேறி, காற் றில் கலந்து, குடியிருப்பு பகுதி வீடுகளில் விழுவதாக புகார் எழுந்துள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், அயோத்யா நகர், கார்த்திக் நகர், ராஜீவ் நகர், புங்கமரத் தோட்டம், பாரப்பாளையம் பகுதி மக்கள், இது குறித்து புகார் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், உடனடியாக ஆய்வு செய்ய மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், கார்த்திக் நகரில் செயல்படும் சாய ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். சாய ஆலையில் நிறுவப்பட்டுள்ள பாய்லர்கள், புகை போக்கிகள், ஆலையிலிருந்து கரித்துகள் வெளியேறுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.ஆய்வு குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''சாய ஆலையில், துணியில் சுருக்கங்களை சரி செய்யும் ஸ்டென்டர் மெஷின் இயக்குவதற்கு, தெர்மிக் புளூயிட் பாய்லர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான புகை போக்கி உயரம் குறைவாக உள்ளது. புகைபோக்கியின் உயரத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை விவரங்கள், கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றனர்.
02-Feb-2025