உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சியில் தொழில் உரிமம் பெற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

நகராட்சியில் தொழில் உரிமம் பெற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள தொழில் நிறுவனங்கள், உடனடியாக தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதுவரை, 739 பேர் வரை, கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்று வந்தனர்.நடப்பாண்டு, ஜி.எஸ்.டி., மற்றும் மின் வாரியத்தில் வணிக மின் இணைப்பு பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும், என அரசு அறிவித்துள்ளது.இதன் அடிப்படையில், உடுமலை நகராட்சியில், 2,719 தொழில் நிறுவனங்கள் உள்ளதாக பட்டியல் தயாரித்து, அரசு அனுப்பியுள்ளது.அதன் அடிப்படையில், நகராட்சி சார்பில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. நேற்று வரை, 1,200 தொழில் நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுள்ளனர். இதுவரை, தொழில் உரிமம் பெறாதவர்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில், கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !