மேலும் செய்திகள்
காரியாபட்டியில் மழையால் வெங்காய பயிர்கள் சேதம்
19-Dec-2024
உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு, வரும், 31ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம், என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது: மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயிர்கள், இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்தால், இழப்பீடு கிடைக்கும் வகையில், பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டம் காரீப், ராபி பருவங்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.நடப்பு, 2024 - -25ம் ஆண்டு, ராபி பருவத்திற்கு தக்காளி பயிரிட்டுள்ள மடத்துக்குளம், துங்காவி குறுவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யலாம்.துங்காவி குறுவட்டத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.ராபி பருவ விவசாயிகள், வரும் 31ம் தேதி வரை, பிரீமியம் தொகை செலுத்தலாம். இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், 95 சதவீதம் தொகையும், விவசாயிகளின் பங்களிப்புத்தொகை, தக்காளி பயிருக்கு, 5 சதவீதம், வெங்காயத்திற்கு, 1.5 சதவீதம் ஆகும்.அதன் அடிப்படையில், வெங்காயம் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, ரூ.669ம், தக்காளி பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, ரூ.1,495 ரூபாய் விவசாயிகள் பிரீமியம் செலுத்தவேண்டும்.பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் வெங்காயம் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, ரூ.44 ஆயிரத்து 550, தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.29 ஆயிரத்து, 900 இழப்பீட்டுத்தொகையாக கிடைக்கும்.இத்திட்டத்தின் கீழ், அடிப்படை கவரேஜ் முறையில் பயிர் அறுவடை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பெறப்படும் சராசரி மகசூலை காட்டிலும், குறைவாக மகசூல் இழப்பு அடிப்படையில், குறு வட்டத்தில் பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர், தாமோதரன் 96598 38787 ; பூவிகா தேவி 80720 09226 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
19-Dec-2024