மேலும் செய்திகள்
மானிய விலையில் ஜிப்சம் வினியோகம்
24-Apr-2025
உடுமலை,; உடுமலை பகுதியில், சித்திரை பட்ட சின்னவெங்காய சாகுபடிக்கு நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் பல்வேறு காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றில், வெங்காய சாகுபடியும் முக்கியமானதாக உள்ளது.இச்சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு சின்னவெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில், நாற்று நடவுக்கு இணையாக, நேரடியாக வெங்காயம் நடவும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காயம் நடவுக்கு ஏக்கருக்கு, 700 கிலோ தேவைப்படுகிறது. தற்போது விதை வெங்காயம் கிலோ, 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது.விதை, நடவு, அடியுரம் என நடவு துவங்கும் போதே ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவடையின் போது விலை கிடைக்காவிட்டால், அதிக நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
24-Apr-2025