விவசாய விளைபொருள் ஏற்றுமதியில் ஆர்வமா?
திருப்பூர், ; வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) வெங்கடாசலம் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், தென்னை, முருங்கை, சின்னவெங்காயம், சிறுதானியங்கள், மா, மஞ்சள், வெள்ளரி பயிரிடும், ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி சான்று பெற விண்ணப்பிக்கலாம்.இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு (ஐ.இ., கோடு), பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ், டிஜிட்டல் கையொப்பம், மத்திய உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பதிவு செய்ததற்கான ரசீது சமர்ப்பிக்கப்படவேண்டும். பின்னர், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி.,), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் குறிப்பிடும் சான்றிதழுக்கான தொகை, விவசாயிகள், உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். கடந்த ஏப்., 1ல் சான்று பெற்ற விவசாயிகள் அல்லது புதிதாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விவசாயிகளும் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 98427 37020 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.