உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் பணிபுரிய விருப்பமா?

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் பணிபுரிய விருப்பமா?

உடுமலை; திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்படையில், கூடுதல் பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளனர்.பாதுகாப்பு அலுவலர் - 1, சிறப்பு சிறார் காவல் பிரிவில் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள அலகிற்கு, 2 வீதம் மொத்தம், 4 சமூக பணியாளர் பணியிடங்கள் மாத தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.பாதுகாப்பு அலுவலருக்கு, மாதம் 27,804 ரூபாய் தொகுப்பூதியம்; சமூக பணியாளருக்கு, 18,536 ரூபாய் வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், அனைத்து கல்விச்சான்று, மதிப்பெண், இருப்பிடம், ஜாதிச்சான்றுகள், ஆதார், அனுபவ சான்று நகல்கள் மற்றும் போட்டோ ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.கலெக்டர் அலுவலக, 7வது தளத்தில் இயங்கும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில், வரும் பிப்., 5ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ, தபாலிலோ அனுப்பிவைக்கவேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவங்களை, https://tiruppur.nic.inஎன்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு, 0421 2971198 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை