உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வதேச வானியல் போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

சர்வதேச வானியல் போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

உடுமலை, ; பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் தொடர்பான இணையவழி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டிலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, வானியல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் இணையவழி போட்டி நடத்தப்படுகிறது.ஐ.ஏ.ஏ.சி எனப்படும் சர்வதேச அமைப்பின் சார்பில் இப்போட்டிகள், 16 வயது வரை உள்ளவர்கள், 16 முதல் 19 வயது வரை உள்ளவர்கள், 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் நடக்கிறது.முதல், இரண்டு மற்றும் மூன்று என்ற நிலைகளில் போட்டிகள் நடக்கிறது. ஒவ்வொரு நிலையில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, சர்வதேச அளவிலான சான்றிதழ் வழங்கப்படுகிறது.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், உடுமலை சுற்றுப்பகுதி பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. போட்டியில் பங்கேற்பதற்கு 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி