சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு
உடுமலை; சத்துணவு உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்து வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில், 75க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், உள்ள சத்துணவு மையங்களில், 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.இப்பணியிடங்களை நிரப்ப திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியத்தில், 9 காலிப்பணியிடங்களுக்கு, 35 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு பி.டி.ஓ., சுப்பிரமணியம், உடுமலை தாசில்தார் கவுரிசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது.தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்; முடிவுகள் மாவட்ட நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.