உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டாவில் பெயர் சேர்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு

பட்டாவில் பெயர் சேர்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்,; நில ஆவணங்களில் பட்டா மாறுதல், பெயர் சேர்த்தல் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து, நடைபெறவுள்ள ஜமாபந்தியில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: தமிழகம் முழுவதும் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணைய வழியில் அனைவரும் பார்வையிடும் வகையில் உள்ளது. இதில், சில சிட்டாக்களில் பட்டாதாரர்கள் பெயர் இடம் பெறாமல் உள்ளது.இறந்து போன நில உரிமையாளர் பெயர் நீக்கப்பட்டும், அவரது வாரிசுதாரர் பெயர் சேர்க்கப்படாமலும் உள்ளது. அவ்வாறு பெயர் சேர்க்க வேண்டிய நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன், இ சேவை மையங்கள் அல்லது சிட்டிசன் போர்ட்டல் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் அடிப்படையில் சரி பார்க்கப்பட்டு எதிர் வரும் ஜமா பந்தி நிகழ்வில் உரிய உத்தரவு பிறப்பித்து, நில ஆவணங்களில் மாறுதல் செய்யப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி