மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸ் ஐ.டி., கார்டு
12-Feb-2025
பல்லடம்,; பெண் என்பதால் சவாரி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டுவதாக, ஆட்டோ டிரைவர் கண்ணீருடன் போலீசில் புகார் அளித்தார்.பல்லடம் அடுத்த காளிவேலம்பட்டியை சேர்ந்தவர் பிரியா, 38; ஆட்டோ டிரைவர். நேற்று பல்லடம் போலீசில் புகார் அளித்தார். பிரியா கூறியதாவது:கடந்த, 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்தாண்டு சொந்தமாக ஆட்டோ வாங்கினேன். எனது கணவர் சுப்ரமணியம் கட்டட தொழிலாளி. கையில் கட்டி ஏற்பட்டதால், அவரால் சரிவர வேலை செய்ய முடியாது. எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டுச்செலவை நான் ஆட்டோ ஓட்டினால்தான் ஈடு செய்ய முடியும்.பல்லடத்தில் உள்ள ஏதாவது ஒரு ஸ்டாண்டில், எனக்கு ஆட்டோ ஓட்ட இடம் தருமாறு, கேட்டேன்.கடந்தாண்டு நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சி உட்பட, ஆர்.டி.ஓ.,வை சந்தித்தும் மனு அளித்தேன். தற்போது உள்ள ஆட்டோ ஸ்டாண்டையே பயன் படுத்திக் கொள்ளுமாறு ஆர்.டி.ஓ., கூறினார். ஆனால், அங்குள்ள சில ஆட்டோ டிரைவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால், மாணிக்காபுரம் ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திக்கொண்டு, ஆட்டோ ஓட்டி வருகிறேன்.நேற்று முன்தினம் முதியவர் இருவர் எனது ஆட்டோவில் ஏறினர். உடனே சில ஆட்டோ டிரைவர்கள் தடுத்து நிறுத்தி, அவர்களை கீழே இறங்க வைத்தனர். தகாத வார்த்தையால் என்னை திட்டி மனதளவில் காயப்படுத்தினர். பெண் என்பதால் என்னை மிரட்டுகின்றனர். மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.மனுவைப் பெற்ற போலீசார், விசாரிப்பதாக உறுதியளித்தனர்.
12-Feb-2025