மக்களைக் கசக்கிப்பிழிவதா? ஆவேசப்படுகிறது அ.தி.மு.க.,
அ.தி.மு.க., 'பூத் கமிட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்ற, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:அபரிமிதமான சொத்துவரி உயர்வு, குப்பை வரி உயர்வு, 6 சதவீத அபராத வட்டி என, பல்வேறு வகையில் மக்களிடம் இருந்து சுரண்டிய திருப்பூர் மாநகராட்சி, உபரி பட்ஜெட் தாக்கல் செய்தது பெருமையல்ல. மக்களை கசக்கிப்பிழிந்து, வரியினங்களை உயர்த்தியுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியின் வரி உயர்வு ஆகாயத்தை தொட்டுவிட்டது. உபரி பட்ஜெட் தாக்கல் செய்து என்ன பயன் என, கூட்டணி கட்சி கவுன்சிலர்களே கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை துவக்கியுள்ளனர். கடந்த 2021 வரை 'குட்டி ஜப்பான்' என்று புகழப்பட்ட திருப்பூர், கடலில் மூழ்கிய கப்பலை போலவும், காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை போலவும் மாறிவிட்டது. உயர்த்திய வரிகளை குறைக்க வேண்டும். நான்கு கோடி ரூபாய்க்கு மேல் உபரி நிதியை காண்பித்துள்ளதால், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.